Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“இந்த வீட்டில் இருக்கணும்னு அவசியம் இல்ல”… டென்ஷனான ஜூலியை கன்பெக்சன் ரூமிற்கு வரச்சொன்ன பிக்பாஸ்…!!!

கேமில் கேட்ட கேள்விக்கு பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை என சொல்லிய ஜூலியை கன்பெக்சன் ரூமிற்கு செல்ல சொன்ன பிக் பாக்ஸ்.

24 மணி நேரமும் ஓடிடியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இன்றைய 3-வது ப்ரோமோவில் அனைவரும் ஒன்றாக இருக்க கத்துக்க வேண்டும் என்று டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டாஸ்கில் போர்டில் கேள்வி ஒன்று கேட்கப்படும். அதற்கு நான்கு ஆப்ஷன்கள் கொடுக்கப்படும். அதில் ஒன்றை போட்டியாளர்கள் தேர்வு செய்ய வேண்டும். இந்த டாஸ்கில் ஜூலி விளையாடுகிறார். அப்போது என்னால் பதிலளிக்க முடியாது என கூறுகின்றார். இதை பயன்படுத்துவது ஒரு கேமுக்காக இல்லை.

அப்ப நான் காட்டும் அன்பு போலி போல் இருக்கும்‌. இந்த கேள்விக்கு பதிலளித்த தான் விளையாட வேண்டும் என்ற அவசியம் எனக்கு இல்லை. இதில் கொடுக்கப்பட்டுள்ள ஆப்ஷனை தேர்ந்தெடுத்தால் நான் என்னையே அசிங்கபடுத்துவதுக்கு சமம். இவ்வாறு பேசிக் கொண்டிருக்கும் ஜூலியை பிக்பாஸ் கன்பெக்சன் ரூமிற்கு செல்லும்படி சொல்கிறார். இதன் பிறகு என்ன நடந்தது என்று தெரியவில்லை. புரோமோவில் கடைசியாக ஜூலி சோகமாக படுத்திருப்பது போல் காட்டப்படுகிறது. இன்று ஒளிபரப்பான பிறகுத்தான் என்ன நடந்தது என முழுமையாக தெரியும்.

Categories

Tech |