நூதன முறையில் நகை மற்றும் பணத்தை திருடிச்சென்ற மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் பகுதியில் முத்து-முருகேஸ்வரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் முத்து வெளிநாட்டில் வேலை பார்ப்பதால் முருகேஸ்வரி வீட்டில் தனியாக இருந்துள்ளார். இந்நிலையில் முருகேஸ்வரியின் வீட்டிற்கு சென்ற முதியவர் ஒருவர் உங்களது வீட்டில் தோஷம் இருக்கிறது என கூறியுள்ளார். இதனை அடுத்து பரிகாரம் செய்ய வேண்டும் எனக்கூறி வீட்டில் இருக்கும் நகை மற்றும் பணத்தை பூஜையில் வையுங்கள் என முதியவர் தெரிவித்துள்ளார்.
இதனை நம்பிய முருகேஸ்வரி வீட்டில் இருந்த 2 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் 11 பவுன் தங்க நகையை பூஜை அறையில் வைத்துள்ளார். இதனையடுத்து முருகேஸ்வரி கவனக்குறைவாக இருந்த சமயத்தில் முதியவர் நகை மற்றும் பணத்தை எடுத்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து முருகேஸ்வரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் . அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நூதன முறையில் பணம் மற்றும் நகையை திருடி சென்ற முதியவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.