Categories
சினிமா தமிழ் சினிமா

‘இந்த வீட்டுல கிசுகிசு பேசுறது கஷ்டம் தான் போல’… பிக்பாஸ்-5 புதிய புரோமோ…!!!

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் புதிய புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மிகப்பெரிய ரியாலிட்டி நிகழ்ச்சி தான் பிக்பாஸ். இந்த நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதுவரை நான்கு சீசன்கள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. விரைவில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி தொடங்கப்பட உள்ளது. கடந்த நான்கு சீசன்களை தொகுத்து வழங்கிய கமல்ஹாசன் தான் 5-வது சீசனையும் தொகுத்து வழங்க இருக்கிறார். மேலும் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் யார் யாரெல்லாம் போட்டியாளர்களாக கலந்து கொள்வார்கள் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கின்றனர் .

ஏற்கனவே பிக்பாஸ் 5 நிகழ்ச்சிக்கான ஒரு சில புரோமோ வீடியோக்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் கமல்ஹாசன் பெட்டில் படுத்துக்கொண்டே பிக்பாஸ் வீட்டில் நடக்கும் கிசுகிசு குறித்து பேசும் புதிய புரோமோ வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |