சென்னையிலுள்ள ஜேப்பியார் வீட்டை போலி ஆவணங்கள் மூலம் கைப்பற்ற முயற்சிப்பதாக அவரது மனைவி மத்திய குற்றப்பிரிவிற்கு புகார் கொடுத்துள்ளார்.
ஜேப்பியார் கல்வி குழுவின் தலைவரான ஜேப்பியார் , சென்னையில் ராயப்பேட்டை பகுதியில் உள்ள கணபதி தெருவில் அவரது வீட்டில் வாழ்ந்து வந்தார். இந்த வீடானது அவரது மனைவியின் பெயரில் இருக்கின்றது. இந்நிலையில் ஜேப்பியார் இறந்த பிறகு இந்த வீடு பற்றிய பிரச்சினை கிளம்பியது.
இந்த வீட்டை வைத்து ரூபாய் 5 கோடிக்கு கடன் வாங்கியதாகவும், இந்த கடனானது செலுத்தபடாததால், இந்த வீடு இனி எனக்கு சொந்தமானது என பைனான்சியர் ஒருவர் கூறியுள்ளார். இதனால் அவரின் மனைவி மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு புகார் அளித்துள்ளார்.
இப்புகாரில், இந்த வீட்டை வாங்குவதற்காக போலி ஆவணங்களை தயார் செய்துள்ளனர் என்று கூறியுள்ளார். இந்த வழக்கானது சென்னையிலுள்ள ஐகோர்ட்டில் தொடர்ந்தது. இந்த ஐகோர்ட்டின் உத்தரவின்படி, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஜேப்பியாரின் மகளான ஷீலா மற்றும் அவரிடம் வேலை பார்த்த இரு பணியாளர்கள் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.