திருநெல்வேலியில் தோட்டக்கலை அலுவலர் மற்றும் உதவி வேளாண்மை பணிக்கான எழுத்துத் தேர்வு நடைபெற்றது.
தமிழ்நாட்டின் அரசு பணியாளர்களுக்கான தேர்வாணையத்தால் உதவி தோட்டக்கலை மற்றும் உதவி வேளாண்மை அலுவலர்களுக்கான எழுத்துத்தேர்வு நடைபெற்றது. இது நெல்லை மாவட்டம் சிதபற்பநல்லூரிலிருக்கும் கலை அறிவியல் கல்லூரி மற்றும் தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் நடைபெற்றது. இந்த தேர்விற்கு 1,581 நபர்கள் விண்ணப்பித்தனர். இந்த தேர்வு இரண்டு வேலையாக நடைபெற்றது.
அப்போது காலை வேளையில் தேர்வு எழுத வந்தவர்களில் சிலர் 10 நிமிடங்கள் தாமதமாக வந்துள்ளனர். இதனால் தேர்வை கண்காணிக்கும் அதிகாரிகள் அவர்களை தேர்வு எழுதுவதற்கு அனுமதிக்கவில்லை. இதனையடுத்து அதிகாரிகள் அனைவரும் கலந்து பேசிய பின் சுமார் 30 க்கும் மேற்பட்டோர்களை மதியமாக வைக்கப்பட்ட தேர்விற்கு அனுமதி அளித்தனர்.