ஆக்சிஜன் ஆலைகள் நிறுவும் பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு ஆலைகள் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
இந்தியாவில் தற்போது கொரோனா தொற்றின் மூன்றாவது அலை தென்பட தொடங்கியுள்ளது. இதனால் ஆக்சிஜன் உற்பத்தி, கையிருப்பு, படுக்கை வசதி போன்றவற்றை பிரதமர் நரேந்திர மோடி நிபுணர் குழுவுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். பிஎம் கேர்ஸ் நிதியில் இருந்து வாங்கப்படும் பிஎஸ்ஏ ஆக்சிஜன் ஆலைகள் செயல்பாட்டுக்கு வந்த உடன் அவை நான்கு லட்சம் படுக்கைகளுக்கு வழங்கப்படும் என்று அதிகாரிகள் பிரதமரிடம் தெரிவித்துள்ளனர்.
மேலும் ஆக்சிஜன் ஆலைகள் நிறுவும் பணி விரைவில் முடிக்கப்பட வேண்டும் என்றும், ஆலைகள்செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். ஆக்சிஜன் செயல்பாடு மற்றும் பராமரிப்புக்காக பயிற்சி பெற்ற ஊழியர்கள் போதிய அளவில் இருக்கிறார்களா இன்று பிரதமர் மோடி விசாரித்தார். ஆக்சிஜன் செயல்பாட்டை கண்காணிப்பதற்காக மேம்படுத்தப்பட்ட தொழில் நுட்பத்தை ஈடுபடுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.