மதுரையில் மர்ம நபர்கள் பூட்டிய வீட்டில் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நவீன காலகட்டத்தில் அனைவரும் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகிறது. ஏனெனில் ஆங்காங்கே சில நபர்கள் கொலை, கொள்ளை போன்ற சட்டத்திற்குப் புறம்பான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள். இதனைத் தடுக்க காவல்துறையினர் பல முயற்சியில் ஈடுபட்டும் கூட இன்றளவும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில் மதுரையிலும் கொள்ளைச் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.
அதாவது மதுரை மாவட்டம் மேலூரில் மோகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் வீட்டைப் பூட்டிவிட்டு நாகலாபுரத்திலுள்ள கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார். இதனையடுத்து வீட்டிற்கு வந்த அவர் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். அதன்பின் வீட்டிற்குள் சென்று பீரோவை பார்த்ததில் அதிலிருந்த 4 பவுன் நகையும் ரூபாய்5 ,000 திருடு போயிருப்பது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து மோகன் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடிவருகிறார்கள்.