தனுஷ், ஐஸ்வர்யா விவகாரத்தில் திருமண வாழ்க்கையில் நல்ல விஷயமாக இருந்ததே தற்போது பிரச்சினையாகி விட்டதாக அடுத்த பேச்சு கிளம்பியுள்ளது.
தனுஷ் ஐஸ்வர்யா கடந்த 18 வருடத்திற்கு முன்பாக காதலித்து திருமணம் செய்துள்ளார்கள். ஆனால் தற்போது இருவரும் பிரிய போவதாக இணையத்தில் பதிவிட்டுள்ளார்கள். இதனால் அதிர்ச்சியடைந்த தனுஷ் ஐஸ்வர்யா குடும்பத்தார்களும், உறவினர்களும் அவர்களை மீண்டும் எப்படியாவது சேர்த்து வைத்து விடவேண்டும் என்ற எண்ணத்திலுள்ளார்கள்.
இந்நிலையில் அடுத்த பேச்சு ஒன்று அனைவரிடத்திலும் தற்போது கிளம்பியுள்ளது. அதாவது இதற்கு முன்னதாக ஐஸ்வர்யா ஒரு பேட்டியில் கூறும்போது தனுஷ் உடனான தனது உறவில் சிறந்த விஷயமே நாங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் அதிக இடம் கொடுப்பது தான் என்று கூறியுள்ளார். இதனால் இருவரும் அதிக ஸ்பேஸ் கொடுத்துதனித்தனியாக வாழ்வதில் நிம்மதியடைந்து விட்டார்கள் என்று தற்போது பேச்சு கிளம்பியுள்ளது.