பழைய பொருட்களுக்கு எப்பொழுதுமே மவுசு அதிகம் தான். ஒரு சிலர் பழைய பொருட்களை சேர்த்து வைப்பார்கள். அதைப் போல பழைய நாணயங்களை சேர்த்துவைப்பதன் மூலம் சில சமயம் பெரும் பணக்காரர் ஆவதற்கு கூட வாய்ப்பு இருக்கிறது. ஆனால் அந்த நாணயங்கள் அரிய வகையாக இருக்க வேண்டும். தற்போது பல்வேறு வலைத்தளங்களில் பழைய நாணயங்களையும், நோட்டுகளையும் விற்பதன் மூலம் கோடீஸ்வரர் கூட ஆகலாம். இதுபோன்ற வாய்ப்பு சமீப நாட்களில் நிறையப் பேருக்குக் கிடைத்துள்ளது.
அந்த வகையில் ஒரு ரூபாய் பழைய நாணயம் உங்களிடம் இருந்தால் கூட ஒரு கோடி பெறும் வாய்ப்பு கிடைக்கும். ஆனால் உங்களிடம் இருக்கும் ஒரு ரூபாய் நாணயம் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்டதாக இருக்க வேண்டும். அதில் 1885 ஆம் ஆண்டு பொறிக்கப்பட்டிருக்க வேண்டும். இதேபோல, ராணி விக்டோரியாவின் படம் அல்லது ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் படம் பொறிக்கப்பட்ட நாணயங்களும் மிக அரிதானவை. indiamart போன்ற இ-காமர்ஸ் இணையதளங்களில் விளம்பரம் செய்யலாம். நாணயத்தை வாங்க விரும்புவோர் நேரடியாகவே உங்களை தொடர்புகொள்வர்.
இதற்கு முதலில் indiamart இணையதளத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும். அரிதான நாணயம், கொஞ்சம் அதிஷ்டம், நாணயத்தை வாங்குவோரின் ஒப்புதல் ஆகியவற்றின் அடிப்படையில் நிறைய பணம் கிடைக்கும். உங்களிடம் இந்த நாணயங்கள் இருந்தால் indiamart போன்ற இணையதளங்களில் பதிவு செய்து போட்டோ, உங்கள் மொபைல் எண், இமெயில் ஐடி உள்ளிட்ட விவரங்களை கொடுத்து விளம்பரம் செய்யலாம். அதிஷ்டம் இருந்தால் நீங்களும் லட்சங்கள் அல்லது கோடிகளில் பணம் பெறலாம்.