Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

இந்த 10 ரூபாய் உங்களுடையதா….? பெண்ணிடம் நூதன முறையில் திருட்டு…. போலீஸ் விசாரணை…!!

நூதன முறையில் நகை மற்றும் பணத்தை திருடி சென்ற பெண்ணை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

கடலூர் மாவட்டத்திலுள்ள விருத்தாசலம் பகுதியில் விஜயன்-ரம்யா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் ரம்யா விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்துவிட்டு மீண்டும் ஊருக்கு புறப்பட்டுள்ளார். இதனையடுத்து விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகில் இருக்கும் ஹோட்டலில் ரம்யா உணவு சாப்பிடுவதற்காக சென்றுள்ளார். அப்போது கீழே கிடக்கும் 10 ரூபாய் நோட்டு உங்களுடையதா என்பதை பாருங்கள் என ரம்யாவிடம் ஒரு பெண் கூறியுள்ளார்.

இதனால் ரம்யா கீழே குனிந்து பார்த்த சமயத்தில் அந்தப் பெண் இருக்கையில் இருந்த கைப்பையை திருடிவிட்டு சென்றுள்ளார். அந்த கைப்பையில் 6000 ரூபாய் பணம் மற்றும் 2 1/2 பவுன் தங்க நகை இருந்துள்ளது. இதுகுறித்து ரம்யா விழுப்புரம் தாலுகா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தங்க நகை மற்றும் பணத்தை திருடிச்சென்ற பெண் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |