இன்றைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன்படுத்த தொடங்கி விட்டனர். அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் அனைவரும் பல செயலிகளை பயன்படுத்தி வருகிறார்கள். அதில் ஒரு சில செயலிகள் ஆபத்தை விளைவிக்கும் செயலிகளாக உள்ளன என அவ்வபோது பல எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் ஆபத்தை விளைவிக்கும் பன்னிரண்டு செயலிகள் கூகுள் பிளே ஸ்டோரில் இடம் பெற்றிருப்பதாக மெக்கஃபே பாதுகாப்பு நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த செயலிகளை பயணங்கள் ஆண்ட்ராய்டு போன்களில் இன்ஸ்டால் செய்தால் அவை பிற செயல்களின் செயல்பாட்டை தடுத்து உங்கள் ஃபோனில் தேவையில்லாத நோட்டிபிகேஷன், ஷார்ட் கட்டுகள் மற்றும் வெப்சைடுகளை தோற்றுவிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நமது தகவல்களும் இந்த செயலிகள் மூலமாக திருடப்பட வாய்ப்பு உள்ளதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளது . அந்த செயலிகளின் பெயர்களையும் மெக்கஃபே வெளியிட்டுள்ளது. அவை currency converter, EzDica, EzNotes, Flashlight+. Flashlight+ imagevault, Flashlight+ Flash plus, Highspeed Camera, Instagram Profile downloader, Joycode, K-Dictionary, Quick Note, Smart Task Manager ஆகியவை ஆகும்.