Categories
தேசிய செய்திகள்

இந்த 2 திட்டத்தில் எதில் சேர்ந்தாலும்…. ரூ.2 லட்சம் இழப்பீடு கிடைக்குமாம்…. எப்படினு தெரிஞ்சிக்கோங்க…!!!

மத்திய அரசால் 2025 இல் பிரதம மந்திரி பிரதமர் சுரக்ஷா யோஜனா( தனிநபர் விபத்து காப்பீடு) பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (தனி நபர் ஆயுள் காப்பீடு) என்று இரண்டு திட்டங்கள் கொண்டுவந்துள்ளது. இந்த திட்டத்திற்கு நாம் முதலில் வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருக்க வேண்டும். அவ்வாறு வைத்திருக்கும் பட்சதில் எந்தவொரு இறப்பாக இருந்தாலும் இழப்பீடு பெற முடியும்.  இந்த  விபத்து காப்பீட்டு திட்டத்தின் கீழ் வருடத்திற்கு 12000 செலுத்தினால் போதும். இறந்தவருடைய  குடும்பத்திற்கு 2 லட்சம் ரூபாய் இழப்பீடு கொடுக்கப்படும்.

ஆயுள் காப்பீடு திட்டத்தில் வருடத்திற்கு 330 ரூபாய் கட்டினால் சம்பந்தப்பட்ட இறந்தபிறகு அவருடைய குடும்பத்திற்கு 2 லட்சம் இழப்பீடு கொடுக்கப்படும். இது எல்லாமே எல்ஐசி மூலமாக கொடுக்கப்படுகிறது. தனிநபர் ஆயுள் காப்பீடு திட்டத்திற்கு 18 முதல் 50 வயதுக்குள் இருக்க வேண்டும். இந்த திட்டத்தில் ஜாயின் பண்ணி முதல் 45 நாட்களுக்குள் ஆக்சிடென்ட் ஆகி இறந்தாலோ அல்லது  மற்றபடி எப்படி இறந்தாலும் இழப்பீடு கிடைக்காது. ஆனால் 45 நாட்களுக்கு பிறகு  விபத்து, கொரோனா அல்லது வேறு எப்படி இறந்தாலும் இழப்பீடு கிடைக்கும். ஆனால் தற்கொலை செய்து கொண்டால் மட்டும் இழப்பீடு கிடைக்காது.

விபத்து காப்பீடு திட்டத்தில் வெறும் விபத்து மூலம் இறந்தவர்க்ளுக்கு மட்டும் இழப்பீடு கிடைக்கும். இதற்கு வருடத்திற்கு 12 ஆயிரம் கட்ட வேண்டும். விபத்தில் இறந்து விட்டால் மட்டுமல்லாமல், ஆக்சிடண்ட் ஆகி அவர் உயிர் பிழைத்து எதாவது அடி பட்டிருந்தாலும் 2 லட்சம் வரை இழப்பீடு கிடைக்கும். 70 வயது வரை பிரீமியம் செலுத்தி கொள்ளலாம். இந்த திட்டத்தில் ஜாயின் பண்ணி முதல் 45 நாட்களுக்கு எந்த ஒரு இழப்பீடும் கிடையாது. 45 நாட்களுக்கு பிறகுதான்  இழப்பீடு கிடைக்கும்.

இந்தத் திட்டத்தில் சேருவதற்கு வங்கியில் கணக்கு திறக்கும் போதே தனிநபர் விபத்துக் காப்பீட்டு திட்டத்திற்கு என்று ஒரு விண்ணப்பமும் விபத்து காப்பீட்டு திட்டத்திற்கு என்று ஒரு விண்ணப்பம் வாங்கி எழுதிக்கொடுத்து ஜாயின் பண்ணி கொள்ள வேண்டும். இதில் சேர ஆன்லைன் மூலமாகவும் விண்ணப்பித்துக் கொள்ளலாம். இதுகுறித்து அருகிலுள்ள வங்கிகளிலும் சென்று தெரிந்து கொள்ளலாம்.

இந்த இரண்டு திட்டத்தில் சேர்ந்த ஒருவர் இறந்து விட்டால் அல்லது விபத்து ஏற்பட்டாலோ அவருக்கு நாமினியாக சேர்க்கப்பட்டவர மட்டும்தான் இழப்பீடு வாங்க முடியும். அதற்கு வங்கியில் சென்று விண்ணப்பத்தை நிரப்பி கொடுத்து இறந்தவருடைய டெத் சர்டிபிகேட், நாமினி பாஸ்புக், இறந்தவர் பாஸ் புக், ஐடி ப்ரூப் போட்டோ எல்லாம் கொடுத்து  வாங்கிக் கொள்ளலாம். இந்த திட்டத்தை தெரிந்தவர்களிடமும் சொல்லி பயனடைந்து கொள்ளலாம்.

Categories

Tech |