Categories
சினிமா

“இந்த 2 படங்களை ஒப்பிட்டு பேசுவது தவறு”…. வெளிப்படையாக பேசிய நடிகர் ஆரி…..!!!!!

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனர், நடிகர், இசையமைப்பாளர் என பண்முகத்தன்மை கொண்ட பாக்யராஜ் 21 ஆண்டுகளுக்கு பின் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் “3.6.9” ஆகும். இந்த படத்தை பிஜிஎஸ் சரவணகுமார் தயார்ப்பில் இயக்குனர் சிவ மாதவ் இயக்கி உள்ளார். உலக கின்னஸ் சாதனை படைக்கும் வகையில் இத்திரைபடம் நேரடியாக 81 நிமிடங்களில் படமாக்கப்பட்டு இருக்கிறது. அதாவது 24 கேமராக்களில் ஒளிப்பதிவுசெய்ய, 450 தொழில்நுட்ப கலைஞர்கள் கலந்துகொள்ள , 75க்கும் மேற்பட்ட நடிகர்களின் நடிப்பில் உருவாகியுள்ளது. இந்த படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றபோது படக்குழுவினருடன் பலரும் பங்கேற்றனர். அப்போது நடிகர் ஆரி பேசியதாவது, இப்படத்திற்கு வருவதற்கு முன்பு படத்தை குறித்த விசயங்களை கேட்டேன். சயின்ஸ் பிக்சன் படம் என்று கூறுகிறார்கள். ‘3.6.9’ என் கார் நம்பர் ஆகும்.
அந்த நம்பர் தொடர்பாக பல பேர் கூறிய பிறகுதான் தெரிந்தது. உலகில் எந்த விசயத்தை எடுத்து கொண்டாலும் அது  ‘3.6.9’ நம்பரில் அடங்கும். அவ்வளவு பவர் அந்த நம்பருக்கு உண்டு என்பதால், அந்த கருத்தில் தான் இந்தப்படத்தை எடுத்துள்ளார்கள் என நினைக்கிறேன். இதற்கிடையில் இங்கு பேசிய படக்குழுவினர் அனைவரும் அவர்களுடைய தாய் தந்தையரை வாழ்த்தி பேசியது பிடித்து இருந்தது. தற்போது திரையுலகில் ஒரு பஞ்சாயத்து போய் கொண்டு இருக்கிறது. அதாவது பீஸ்ட் – கேஜிஎஃப் முதலில் இதை ஓப்பிடுவதே தவறான ஒன்றாகும். இதில் கேஜிஎஃப் ஒரு பான் இந்திய படம் மற்றும் பீஸ்ட் ஒரு மொழிக்கான படம் ஆகும்.
இதனால் பீஸ்டை தாழ்த்தி பேசுவது என்பது மிகவும் தவறு ஆகும். தமிழ் திரையுலகம் செய்யாத சாதனைகளே கிடையாது. இங்கு தான் ஒத்த செருப்பு திரைப்படம் வந்தது. உலகின் 100 சிறந்த படங்களில் பட்டியலிடப்பட்ட நாயகன் படமும் இங்குதான் உருவாகியது. தமிழ்படங்களை தாழ்த்தி பேசக்கூடாது. ஆகவே இப்படிப்பட்ட திரைப்படங்களை நாம் கொண்டாட வேண்டும், முன்னெடுத்து செல்ல வேண்டும். இந்த படத்திற்கு ஆதரவு தாருங்கள். பாக்யராஜ் சார் 21  ஆண்டுகளுக்கு பின் நாயகன் என்கிறார்கள். ஆனால் அவர் எப்போதும் ஹீரோதான். அவர் போன்ற சாதனைகளை யாருமே செய்ய முடியாது. தற்போதுகூட அவர் நடிக்கும் படங்களில் சாதனை செய்கிறார். இத்திரைபடம் பெரிய வெற்றியடைய வாழ்த்துக்கள்” என்று கூறினார்.

Categories

Tech |