நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சிலர் தினங்களாக நீலகிரி, கோவை உள்ளிட்ட சில மாவட்டங்களில் கன மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தவிர தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை 2 நாட்கள் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக கூடலூர் பஜாரில் 14 அவலாஞ்சியில் 11, மேல் கூடலூரில் 10 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.