5 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 27ம் தேதி வேலை நிறுத்தம் செய்ய வங்கி ஊழியர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது .
வாரத்துக்கு இரண்டு நாட்கள் விடுமுறை, ஓய்வூதியத்தை மாற்றி அமைத்தல், நிலுவையில் உள்ள இதர பிரச்சினைகளுக்கு தீர்வு காணுதல் என ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 27-ஆம் தேதி வேலை நிறுத்தம் செய்ய வங்கி ஊழியர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது. வரும் 25-ஆம் தேதி 4-வது சனிக்கிழமை, அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால் இரண்டு நாட்கள் வார விடுமுறை. அதற்கு அடுத்த நாளான திங்கள்கிழமை வேலை நிறுத்தம் என்பதால் அன்று பரிவர்த்தனைகள் நடைபெறாது. எனவே மக்கள் இந்த மூன்று நாட்கள் மக்கள் வங்கி சேவை தொடர்பான எந்த பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.