தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான கார்த்தி தனது 3 படங்கள் ஒரே தேதியில் வெளியானது குறித்து டுவிட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சி கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக கார்த்தியும் திகழ்கிறார். இவர் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான பருத்திவீரன் படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார். இதனையடுத்து நடிகர் கார்த்தி பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். இந்நிலையில் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சி கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதாவது அவர் நடிப்பில் வெளிவந்த கொம்பன், சுல்தான், பையா ஆகிய திரைப்படங்கள் ஒரே நாளான ஏப்ரல் 2 ல் வெளியானது தொடர்பாக கருத்து பதிவிட்டுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது, பையா தனக்கு புதிய கண்ணோட்டத்தை வெளிப்படுத்த வித்திட்டதாகவும், கொம்பன் திரைப்படம் மீண்டும் என்னை கிராமத்துக்கு அழைத்து சென்றதாகவும், சுல்தான் என்னை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார். இந்த படங்களின் நினைவுகளை நிலைநிறுத்திய இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் அன்பான ரசிகர்களுக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.