Categories
மாநில செய்திகள்

இந்த 3 மாவட்டங்களுக்கு நேரில் சென்று…. முதல்வர் மு.க ஸ்டாலின் ஆய்வு…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை அதிகரித்து வருகிறது. இதனால் நாளுக்கு நாள் இறப்பு வீதங்களும், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே இருந்தாலும் மறுபுறம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதற்கு மத்தியில் நோய்த்தொற்றை தடுப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதன் காரணமாக அரசு மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

அதை சரி செய்யும் விதமாக கல்லூரிகள், பள்ளிகள் உள்ளிட்ட பொது இடங்களில் கொரோனா சிகிச்சை மையம் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. மேலும் பல்வேறு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளும் தமிழகம் முழுவதும் முடுக்கி விடப்பட்டுள்ளன. இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் பாதிப்பு அதிகமுள்ள சேலம், ஈரோடு, கோவை ஆகிய மூன்று மாவட்டங்களில் நேரில் சென்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்த இருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது.

Categories

Tech |