கடத்தல் மற்றும் பாலியல் வழக்கில் தேடப்பட்டு வரும் சாமியார் நித்யானந்தா நேற்று முன்தினம் இரவு ஆன்லைனில் நேரில் தோன்றி பக்தர்களுக்கு அருளாசி வழங்கியுள்ளார்.
நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு ஆன்லைனில் நேரலையில் தோன்றிய அவர் பின் இசையில் சாமி பாடல் ஒலிக்க உடலை அசைத்து நடனமாடியபடி பக்தர்களுக்கு அருள் புரிந்தார். மேலும் நேரலையில் அவர்களின் கேள்விக்கு பதிலளித்தார். மலேசியாவை சேர்ந்த பெண் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு நித்யானந்தா இந்தியா, மலேசியா, நேபாளம், இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கு யாரும் செல்ல வேண்டாம். இந்த நாடுகளை சேர்ந்தவர்கள் வேறு எங்கேயாவது இருந்தால் அங்கேயே இருங்கள். இந்த நாட்டிற்குள் நுழைய வேண்டாம் என்று கூறியுள்ளார்.
உயிரோடு வாழ்வதே இந்த ஆண்டின் உச்சபட்ச நன்மையும் சுகமும் என்று கூறியுள்ளார். மேலும் எப்போதும் என்னுடன் இணைந்திருங்கள். நான் உங்களுக்கு நல்ல அருளை தருகிறேன். நல்லதெல்லாம் செய்கிறேன் என்று கூறியுள்ளார். குற்ற வழக்கில் தேடப்பட்டு வரும் நிலையில், வெளிநாட்டில் பதுங்கி இருக்கும் இவர் சமூக வலைதளங்களில் அவ்வப்போது வீடியோக்களை வெளியிட்டு வந்தார். தற்போது நேரலையில் தோன்றி பக்தர்களுக்கு அருளாசி வழங்குகிறேன் என்று கூறி காமெடி செய்து வருகிறார்.