சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நவம்பர் 10, 11 இல் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கன மழை வெளுத்து வாங்கி வருகிறது. எனவே மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகின்றன. அந்தந்த மாவட்ட நிர்வாகத்தினர் முடிவு செய்து கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ஆகிய 4 மாவட்டங்களுக்கு 10, 11 என இரண்டு நாட்கள் பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் விடுமுறை விடலாம் என தகவல் வெளியாகி இருக்கிறது.
ஏற்கனவே முதலமைச்சர் முக ஸ்டாலின் திங்கள், செவ்வாய் ஆகிய 2 நாட்கள் விடுமுறை என்று அறிவித்திருந்தார்.. தற்போது வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை இருக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது..
எனவே காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 4 மாவட்ட ஆட்சியர்கள் தனித்தனியாக செய்திக்குறிப்பு மூலமாக சிறிது நேரத்தில் 10, 11 ஆகிய 2 நாட்கள் விடுமுறை என வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது..