உங்களின் இதயம் ஆரோக்யமாக இருப்பதற்கு எந்த வகையான உணவுகளை எடுக்கலாம் என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.
உன்னுடைய இதயம் ஆரோக்கியமாக இருந்தால் உடல் முழுமையும் ஆரோக்கியமாக இருக்கும். உங்களுக்கு பிடித்த உணவுகளே உங்களுக்கும், உங்களின் இதயத்திற்கும் தோழனாகவும் இருக்கலாம். உங்கள் உணவில் இதயத்திற்கு நன்மை அளிக்கும் உணவுகள் சேர்ப்பது கட்டாயம் அவசியமாகிறது. உணவு தானியங்கள், கொட்டைகள், மீன், கோழி மற்றும் குறைந்த கொழுப்புள்ள பால் போன்றவை ஆய்வின் மூலம் இதயத்தை ஆரோக்யமாக வைத்துக்கொள்ள முடியும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
ஆலிவ் எண்ணெய்:
இது குறைவான கலோரி கொண்டது. கெட்ட கொழுப்புகளை குறைக்கிறது. ஆலிவ் எண்ணெய் இதய ஆரோக்யத்தை பாதுகாக்கிறது.
சால்மன் மீன்:
இதய நோய்களுக்கான முக்கியமான உணவு மீன். சால்மன் மீன் பிடிக்கவில்லை என்றால் வேறு கடல் உணவுகள், கொழுப்பு நிறைந்த உணவுகள் எடுத்துக்கொள்ளலாம்.
இலை கீரைகள்:
இலைகள் மற்றும் இலை காய்கறிகள் நார்ச்சத்து நிறைந்தவை. இவை வைட்டமின் பி சத்து கொண்டவை. எனவே எளிதில் கிடைக்கும் இந்த உணவுகளை தினமும் உணவில் சேர்க்க முயற்சி செய்ய வேண்டும். இதன் மூலம் இதைஅயத்தின் ஆரோக்யத்தை பாதுகாக்க முடியும்.
பீன்ஸ் வகைகள்:
பீன்ஸ் வகைகளை தவிர பீன்ஸ் விதை உணவு வகைகளையும் சேர்க்க வேண்டும். இவை கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து வைட்டமின் தாதுக்கள் அதிகமாகவும் கொண்டவை. இவை இரத்த அழுத்தம் உண்டாகும் அபாயத்தை குறைக்க செய்கிறது. இதனால் இதயம் ஆரோக்யம் மேம்படுகிறது.
கொட்டைகள் மற்றும் பழங்கள்:
பழங்கள் மற்றும் காய்கறிகள் சாப்பிடுவதை போல அவற்றின் கொட்டைகள் மற்றும் விதைகளை உட்கொள்வது ஊட்டச்சத்து கொடுக்கும். எனவே இவை இதய ஆரோக்யத்தை மேம்பட செய்கிறது.