Categories
மாநில செய்திகள்

இந்த 6 மாவட்டங்களில்…. கடுமையான கட்டுப்பாடு…. எச்சரிக்கை விடுத்த அரசு…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து கொரோனாவை தடுப்பதற்கான தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்கும் முயற்சிகளில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு மத்தியில் ஒரு சில மருந்துகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. ஊரடங்கின் காரணமாக மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது அனைத்து மாநிலங்களிலும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஒரு சில இடங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த மார்ச் மாதம் எப்படி கொரோனா வேகமாக பரவியதோ அதுபோல தற்போதும் பரவுவதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். குறிப்பக கோவை, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சி, திருப்பூர், மாவட்டங்களில் அதிகம் பரவுகிறது. எனவே அந்த மாவட்ட மக்கள் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றவில்லை என்றால் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |