Categories
உலக செய்திகள்

இந்த 7 நாட்டு மக்கள் எங்கள் நாட்டிற்கு வரக்கூடாது…. பயணத் தடை விதித்த நாடு…. எந்தெந்த 7 நாடுகள் தெரியுமா…..?

இஸ்ரேல் கொரோனா பரவல் காரணமாக இந்தியா உட்பட ஏழு  நாடுகளுக்கு பயணத் தடை விதித்துள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. மேலும் ஒரு நாள் பாதிப்பு எண்ணிக்கை நான்கு லட்சத்திற்கும் அதிகமாக அதிகரித்து வருவதால் ஆக்சிஜன் தட்டுப்பாடு, மருந்து தட்டுப்பாடு போன்ற பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன.

இந்நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸ் அதிகரித்து வருவதால் பிரிட்டன், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா போன்ற பல நாடுகள் இந்தியாவுக்கு போக்குவரத்து தடை விதித்துள்ளது. இதனைத் தொடர்ந்து இஸ்ரேலும் இந்தியாவில் இருந்து செல்லும் இந்தியர்களுக்கு தடை விதித்துள்ளது. மேலும் இந்தியாவை தொடர்ந்து உக்ரைன், பிரேசில், தென் ஆப்பிரிக்கா,எத்தியோபியா, துருக்கி, மெக்சிகோ போன்ற நாடுகளுக்கும் பயண தடையை விதித்துள்ளது,

Categories

Tech |