Categories
மாநில செய்திகள்

இந்த 8 மாவட்ட மக்கள் எச்சரிக்கையா இருங்க…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்…!!!!

வங்கக் கடலில் நேற்று முன்தினம் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. அது இன்று கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.காரைக்கால் மற்றும் ஸ்ரீஹரிகோட்டா விற்கு இடையே கடல் ஊரை ஒட்டி கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது சற்று வடக்கே நகர்ந்து மகாபலிபுரம் மற்றும் ஸ்ரீஹரிகோட்டா இடையே இன்று மாலை கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இந்நிலையில் வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் சென்னை, திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, சேலம், வேலூர், திருப்பத்தூர்,ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை ஆகிய எட்டு மாவட்டங்களில் அதிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. காஞ்சிபுரம், விழுப்புரம், தர்மபுரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, செங்கல்பட்டு, கோவை, நீலகிரி, நாமக்கல்,திருச்சி மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.

Categories

Tech |