தற்போது பொதுமக்கள் பல்வேறு சிம் கார்டுகள் பயன்படுத்தி வருகிறார்கள். அவர்களின் தேவைக்கு ஏற்றவாறு சிம்கார்டு நிறுவனங்கள் பல சலுகைகளை வழங்கி வருகிறது. இவ்வாறு பல சலுகைகளை வழங்கி வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்ள சிம் கார்டு நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது.
இந்நிலையில் கடன் சுமையால் திண்டாடி வரும் வோடாபோன் ஐடியா நிறுவனம் திவாலாகும் சூழல் ஏற்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். அந்த நிறுவனம் திவால் ஆனால் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலை இழப்பார்கள் என்றும், மேலும் அந்த சிம்கார்டு வாடிக்கையாளர்களுக்கு சேவை பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.