Categories
அரசியல்

இனிதான் ஆட்டமே…! “கழக பொதுச்செயலாளர் சசிகலா”…. அதிமுகவில் வெடித்த சர்ச்சை…!!!

தமிழகம் முழுவதும் இன்று அதிமுக பொன்விழா ஆண்டு மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி அதிமுக தலைமை அலுவலகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய ஓபிஎஸ்-இபிஎஸ் தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினர். இதற்கிடையில் சசிகலா சென்னை டி.நகர் எம்ஜிஆர் நினைவிடத்திற்கு அதிமுக கொடியுடன் உள்ள காரில் சென்று எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பிறகு அதிமுக கொடியை ஏற்றி அதிமுக பொன்விழா கல்வெட்டை திறந்து வைத்தார்.

அந்த கல்வெட்டில் கழக பொதுச்செயலாளர் சசிகலா என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  அதிமுக பொதுச் செயலாளர் என்பதையும், அதிமுக கொடியையும் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட சசிகலா பயன்படுத்தக்கூடாது என்று அதிமுகவினர் கூறி வரும் நிலையில், இந்த கல்வெட்டு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Categories

Tech |