ஜெயிலர் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பகிர்ந்து அனிருத் ட்விட்டர் பதிவிட்டுள்ளார்.
தமிழ் சினிமா உலகில் ஒரு சில படங்களை மட்டுமே இயக்கி பிரபல இயக்குனராக வலம் வருகின்றார் நெல்சன் தீலீப்குமார். இவர் இயக்கத்தில் விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் சாதனை படைத்தது. நெல்சன் தற்போது ரஜினியின் தலைவர் 169-வது திரைப்படத்தை இயக்குகிறார். இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைக்கின்றார். இதனால் ரசிகர்களிடையே படம் குறித்த எதிர்பார்ப்பினை அதிகரிக்க செய்திருக்கின்றது.
இத்திரைப்படத்திற்கு ஜெயிலர் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த் உடன் ஐஸ்வர்யா ராய், ரம்யா கிருஷ்ணன், பிரியங்கா மோகன், சிவராஜ்குமார் ஆகியோர் நடிக்க உள்ளதாக செய்தி பரவி வருகின்றது. இந்த நிலையில் இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று வெளியாகி உள்ளது. இதை சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது. இதில் ரஜினிகாந்த் வயதான தோற்றத்தில் கண்ணாடி அணிந்தபடி இருக்கின்றார்.
இதற்கு பிரபலங்கள் பலரும் ரீட்விட் செய்து வாழ்த்துக்களை கூறி வருகின்றார்கள். இந்நிலையில் இசையமைப்பாளர் இத்திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பகிர்ந்து “இனிதான் ஆரம்பம்” என ட்விட்டர் பதிவு செய்துள்ளார்.
Ini dhaan aarambam.. #Jailer 🔥
Superstar @rajinikanth 💥@Nelsondilpkumar 🤗@sunpictures ☀️ pic.twitter.com/kEBTpXNITh— Anirudh Ravichander (@anirudhofficial) August 22, 2022