Categories
மாநில செய்திகள்

இனிப்புகளுக்கு ஆவினில் ஆர்டர்…. கேள்வி எழுப்பிய அண்ணாமலை…. போக்குவரத்து துறை அமைச்சரின் பதில்….!!

தமிழகத்தில் போக்குவரத்து துறை சார்பாக 1 லட்சத்து 36 ஆயிரத்து 1/2 கிலோ இனிப்பு ஆவினில் ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளதாக பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார். முன்னதாக போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுக்கு வருடந்தோறும் தீபாவளி பண்டிகையையொட்டி இனிப்புகள் வழங்கப்படும். அதே போன்று இந்த ஆண்டும் இனிப்புகளை வாங்க டெண்டர் விடப்பட்டுள்ளது.

டெண்டர் விதிமுறைகள் 100 கோடி ரூபாய் விற்று முதல் செய்யும் நிறுவனங்களுக்கு டெண்டர் விடப்படும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த டெண்டர் பற்றி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி கேட்டிருந்தார், அதற்கு குறைந்த விலையில் தரமான இனிப்புகளை வழங்கும் நிறுவனத்திடமே ஆர்டர்களை கொடுக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |