இனிப்பு சோளம் சூப் செய்ய தேவையான பொருள்கள:
சோளம் – 1 கப்
வெஜிடபிள் ஸ்டாக் – 1 லிட்டர்
எண்ணெய் – 1 மேசைக்கரண்டி
பால் – 1 முட்டை – 1
அஜினா மோட்டோ – 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
மைதா மாவு – 1 மேசைக்கரண்டி சர்க்கரை – தேவையான அளவு
செய்முறை:
அடுப்பில் கடாயை வைத்து வெண்ணெயை நன்கு உருகியதும், அதனுடன் மைதா மாவு சேர்த்து ஒரு நிமிடம் வறுத்து கொள்ளவும்.
அதனை தொடர்ந்து பால், மக்காச் சோளத்தையும், வெஜிடபிள் கறி வேகவைத்து தண்ணீர், உப்பு, மிளகாய்த்தூளை அதில் சேர்க்கவும்.
மக்காசோள கலவையானது இரண்டு நிமிடம் கொதித்து வந்ததும், அதில் தேவையானால் முட்டையை உடைத்து மெதுவாக விட்டு சுமார் 10 நிமிடம் வரை நன்கு கொதிக்க விடவும்.
பின்பு நன்கு கொதித்ததும் வடிகட்டாமல் அதை சூடாக பரிமாறலாம். தேவைப்பட்டால் அஜினா மோட்டோ, கிரீம் சேர்த்துப் பரிமாறலாம்.