Categories
அரசியல்

இனிமேல் அதிமுக கட்சியே இல்லை…. என்று இந்த தேர்தல் சொல்லிவிட்டது…. கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன்…!!!

தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் விருதுநகர் அருகே கோட்டூரில் புதிய பேருந்து வழித் தடத்தை தொடங்கி வைத்தார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தமிழகத்தில் நடந்து முடிந்த ஒன்பது மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. அதற்கு காரணம் இந்த ஆட்சிக்கு கிடைத்த நல்ல பெயர்தான். பொதுமக்கள் இந்த ஆட்சிக்கு தருகின்ற நற்சான்றாக இந்த உள்ளாட்சி தேர்தல் அமைந்துள்ளது.

ஆனால் இந்த நான்கு மாத காலத்தில் அதிமுக பெரும் தோல்வியை சந்தித்துள்ளது. இனிமேல் அதிமுக கட்சியே  இல்லை என்று சொல்கிற அளவுக்கு இந்த தேர்தல் அமைந்துவிட்டது. உள்ளாட்சித் தேர்தலில் தவறாக நடந்ததாக அதிமுகவினர் குற்றம்சாட்டுகின்றனர். எந்த இடத்தில் எப்போது பிரச்சனை உள்ளது என ஏதாவது ஒரு இடத்தை கூறினால் நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். தேர்தல் நேர்மையாக தான் நடந்தது. கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டாதது போல அதிமுகவினர் தப்பித்துக்கொள்ள பார்க்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |