Categories
உலக செய்திகள்

இனிமேல் அனுமதி உண்டு…! பிரிட்டன் அரசு அதிரடி… மகிழ்ச்சியில் பிரிட்டன் வாசிகள் ….!!

பிரிட்டனில் கப்பல் போக்குவரத்து தொடங்குவது குறித்து கடல் மற்றும் விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.

பிரிட்டனில் கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கொரோனா பரவல் காரணமாக பொது முடக்கம் போடப்பட்டு கப்பல் பயணத்துக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு ஆறுகளில் கப்பல் பயணம் செய்ய மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் இன்னும் கடலில் கப்பல் பயணம் செய்ய அனுமதி அளிக்கப்படவில்லை. இதனையடுத்து கடல் மற்றும் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராபர்ட் கோர்ஸ்  மே 17ஆம் தேதி முதல் கப்பல் போக்குவரத்து கடலில் துவங்க இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளார். இந்த செய்தி கப்பல் போக்குவரத்து தொழிலில் உள்ள அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |