Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

இனிமேல் அனைத்து காவல் நிலையங்களிலும்…. அரசின் அறிவிப்பு…. டி.ஜிபி. சைலேந்திரபாபு அளித்த பேட்டி….!!

தமிழகத்தில் கொலை சம்பவங்கள் குறைந்து வருவதாக டி.ஜி.பி சைலேந்திரபாபு செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

நெல்லையில் உள்ள சுத்தமல்லியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சப்-இன்ஸ்பெக்டர் மார்க்ரெட் தெரசா தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் உள்பட 3 பேர் இருசக்கர வாகனத்தில் மதுபோதையில் சென்றனர். இவர்களை மடக்கிய போலீசார் மது அருந்திவிட்டு இருசக்கரம் ஓட்டியதால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளார். இதனையடுத்து சில நாட்களுக்கு முன்பு மார்க்ரெட் தெரசா பணியில் இருந்தபோது ஆறுமுகம் அவரை கத்தியால் குத்தியுள்ளார்.

இந்த தாக்குதலில் காயமடைந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நெல்லை அரசு மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் இவர் தமிழக காவல்துறை டி.ஜி.பி. சைலேந்திரபாபு நேற்று நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார். இதனைதொடர்ந்து அவருக்கு ஆறுதல் கூறி குற்றவாளியை பிடிக்க முயற்சி செய்ததற்கு பாராட்டுகளை தெரிவித்த நிலையில், ஆறுமுகத்தை மடக்கி பிடித்ஹா போலீசார் ரமேஷ், மணிகண்டன், லட்சுமி ஆகிய பேருக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் 10,000 ரூபாய் வெகுமதியும் வழங்கி பாராட்டியுள்ளார்.

மேலும் செய்தியாளர்களிடம் பேசிய டி.ஜி.பி தமிழகத்தில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 80 கொலை சம்பவங்கள் குறைந்துள்ளது. இதனையடுத்து தென் மாவட்டங்களில் நடக்கும் பழிக்குபழி கொலை சம்பவங்களும் குறைந்துள்ள நிலையில் தற்போது புகையிலை, கஞ்சா, திருட்டு போன்ற குற்றங்கள் அதிகரித்து வருகிறது. எனவே அனைத்து காவல்நிலையங்களிலும் முன் வரவேற்பு அதிகாரி நியமிக்க அரசு அறிவித்துள்ளது. அவர்கள் பொதுமக்களை வரவேற்று பொதுமக்களின் குறைகளை கேட்டறிவார் என்று தெரிவித்தார்.

Categories

Tech |