அமெரிக்காவை சேர்ந்த நிறுவனமொன்று விலங்குகளின் செல்களிலிருந்து இறைச்சியை உருவாக்கி வெற்றி கண்டுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த நிறுவனம் ஆடு, கோழி போன்ற விலங்குகளின் செல்களிலிருந்து இறைச்சியை உருவாக்க முயற்சி மேற்கொண்டு வந்தது. அந்த ஆய்வகத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்த இறைச்சிக்கு சிங்கப்பூர் அனுமதி அளித்துள்ளது. வீடுகளில் ஆடு, கோழி வளர்த்து கறி சமைத்த தினங்கள் மாறி, பண்ணையில் வளர்க்கக்கூடிய இறைச்சிகளை சாப்பிட்ட தினங்களுக்கு வந்தோம். தற்போது அந்த நிலை மாறி ஆராய்ச்சிக் கூடங்களில் உருவாக்கப்படும் இறைச்சியை சாப்பிடும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம்.
ஈட் ஜஸ்ட் என்ற சான் பிரான்சிஸ்கோ நிறுவனம் உயிர்களைக் கொல்லாமல் இறைச்சி கிடைப்பது எப்படி என்பதை யோசித்து அவர்களின் ஆராய்ச்சியின் விளைவாக இது நடந்துள்ளது. இதுபோன்ற வளர்க்கப்படும் நேரடி இறைச்சி மிகவும் உயர்தரமானது என்று ஈட் ஜஸ்ட் தலைமை நிர்வாகி கூறியுள்ளார்.
இதற்கு சிங்கப்பூர் உணவு பாதுகாப்பு அமைப்பும் பலகட்ட சோதனைகளுக்குப் பிறகு இந்த இறைச்சிக்கு ஒப்புதல் அளித்துள்ளது. சிக்கன் நக்கட்ஸ் எனப்படும் பொறித்த கோழிக்கறி உருண்டையில் இவற்றை பயன்படுத்த தற்போது அனுமதித்துள்ளது. இதனை வரலாற்றில் சிறந்த தருணம் என ஈஸ் ஜஸ்ட் தலைமை நிர்வாகி புகழ்ந்துள்ளார். இனிவரும் காலங்களில் பசி எடுக்காமல் இருக்க என்ன செய்வது என்ற மருந்தை கண்டுபிடிக்கவும் வாய்ப்பிருக்கின்றது. அதை மட்டும் செய்து விட்டால் இனி யாரும் உணவு என்பதை உண்ண தேவையில்லை.