Categories
கரூர் மாவட்ட செய்திகள்

இனிமேல் இப்படி வராதீங்க… சோதனையில் வசமாக சிக்கியவர்கள்… எச்சரிக்கை விடுத்த அதிகாரிகள்…!!

தீவிர சோதனையில் ஈடுபட்ட போது முக கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்துள்ளனர்.

தமிழகத்தில் கொரானா வைரஸ் தாக்கம் அதிக வேகமாக பரவி வருகிறது. இதனால் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாட்டு வழிமுறைகளை தீவிரப்படுத்தி வருகின்றது. இதில் கரூர் மாவட்டத்தில் வைரஸின் தாக்கம் சற்று அதிகமாக இருப்பதால், வீட்டிலிருந்து வெளியே வருபவர்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் எனவும், சமூக இடைவெளியை முறையாக கடைபிடிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர். இதனையடுத்து விதிமுறையை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பொதுமக்கள் முறையாக வழிமுறைகளை கடைபிடிக்கிறார்களா என பரிசோதிக்கும் வகையில், தோகைமலை காவல்துறையினரும், சுகாதாரத்துறையினரும் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அந்த சோதனையின் போது முகக்கவசம் அணியாதவர்களுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்துள்ளனர். மேலும் நோயின் தீவிரத்தை எடுத்துக்கூறியும் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர். இவ்வாறு மறுமுறையும் முக கவசம் அணியாமல் வந்தால் மிகவும் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து அனுப்பி வைத்துள்ளனர்.

Categories

Tech |