Categories
சினிமா

இனிமேல் எனக்கு சினிமாதான் பர்ஸ்ட்!… உஷார் ஆகிட்டேன்!…. வாணி போஜன் எடுத்த திடீர் முடிவு….!!!!

சின்னத் திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்த அழகான கதாநாயகிகளில் வாணி போஜனும் ஒருவர் ஆவார். இவர் முன்னணி நடிகைகளே வாயைபிளக்கும் அளவுக்கு கைவசம் பெரும்பாலான படங்களை வைத்துள்ளார். ஆனால் அண்மை காலமாக இவர் காணாமல் போய்விட்டாரோ..? என எண்ணும் அளவுக்கு சத்தம் இல்லாமல் இருந்து வந்தார். இதனிடையில் இரண்டெழுத்து கொண்ட அந்த கோவா நடிகருடன் எங்கேயும் எப்போதும் என வாணி போஜன் சுற்றித் திரிவதாக கூறப்பட்டது. இதன் காரணமாக வாணி போஜனை இயக்குனர்கள் அணுக முடியவில்லை.

அத்துடன் பட வாய்ப்புகளும் கைமாறிப் போனது. இதனையடுத்து வாணி போஜனுக்கு பலரும் அறிவுரை கூறி இருக்கின்றனர். இந்நிலையில் தனக்குரிய வாய்ப்புகள் குறைந்து வருவதை உணர்ந்த வாணிபோஜன், இனி சினிமாவில் மட்டுமே முழுகவனம் செலுத்துவேன் என்று முடிவெடுத்துள்ளார். அதாவது “இனிமேல் எனக்கு சினிமாதான் முக்கியம். வேறுயாரும் கிடையாது. நான் உஷார் ஆகிவிட்டேன்” என தன் சமூக வலைதளங்களில் அவர் பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |