Categories
அரசியல் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விழுப்புரம்

இனிமேல் எல்லாமே அம்மா தான்…! கெத்து காட்டும் எடப்பாடி அரசு…. அம்மா பெயரில் அடுத்தடுத்து திட்டம் …!!

விழுப்புரத்தில் மாண்புமிகு அம்மா பெயரில் புதிய பல்கலைக்கழகம் அமைப்பது தொடர்பான சட்ட முன்வரைவு பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.

கடந்த செப்டம்பர் மாதம் சட்டப்பேரவையில் வேலூரில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக் கழகத்தை இரண்டாக பிரித்து புதிய பல்கலைக்கழகம் விழுப்புரத்தில் உருவாக்கப்படும் என 110 விதியின் கீழ் தமிழக அரசு தெரிவித்தது. பின் தங்கிய மாவட்டங்களாக விழுப்புரமும், கள்ளக்குறிச்சியும் கருத்தில் கொண்டும்  இந்த இரு மாவட்ட மாணவர்களை எதிர்காலத்தை கருத்தில் கொண்டும் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் இரண்டாக பிரிக்க படுவதாக விளக்கம் தரப்பட்டது.

இந்நிலையில் விழுப்புரத்தில் மாண்புமிகு அம்மா பெயரில் புதிய பல்கலைக்கழகம் அமைப்பது தொடர்பான சட்ட முன்வடிவு இன்று சட்டப்பேரவையில் உயர்கல்வித்துறை அமைச்சர் திரு அன்பழகன் தாக்கல் செய்தார். தமிழகத்தில் தேர்தல் வர இருக்கும் நிலையில் தமிழக அரசு மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவாக பல விஷயங்களை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |