ஒமிக்ரான் வைரஸை தொடர்ந்து உருமாற்றமடையும் கொரோனாவிற்கு வீரியம் படிப்படியாக குறையும் என்று ஆய்வில் தெரியவந்திருக்கிறது.
பாஸ்டன் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள், கொரோனாவின் கடைசி உருமாற்றம் ஒமிக்ரான் என்று கூற முடியாது என்றும் மேலும் பல உருமாற்றங்கள் மீண்டும் பரவும் என்றும் கூறியுள்ளனர். மேலும், கொரோனா குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில், ஒவ்வொரு முறையும் கொரோனா பரவும் சமயத்தில் அது உருமாற்றம் அடையும் என்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
வரும் மாதங்களில் மீண்டும் கொரோனா உருமாற்றம் பெற்று உலக நாடுகளில் பரவத் தொடங்கும் என்று ஆய்வுகள் மூலம் தெரியவந்திருக்கிறது. எனினும், ஒவ்வொரு முறை உருமாற்றம் அடையும் போதும், கொரோனாவின் வீரியம் படிப்படியாக குறையும் என்று கூறப்பட்டிருக்கிறது.