கோவையில் புதிதாக விசா அலுவலகம் திறக்கப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஒரு நாட்டை சேர்ந்தவர் மற்றொரு நாட்டிற்கு செல்வதற்கு விசா நடைமுறைகள் உள்ளது. வெகு சில நாட்கள் மட்டுமே விசா நடைமுறைகளில் இருந்து விலக்கு அளித்திருக்கின்றது. விசாவை பொருத்தவரை அதற்கு என குடியேற்ற அதிகாரிகள் இருக்கின்றனர் அவர்கள் மூலமாக மட்டுமே விசா பெற முடியும். இதற்காக ஒவ்வொரு நாட்டிலும் பிரத்தியேக குடியேற்ற அலுவலகங்கள் இருக்கிறது. அதிலும் குறிப்பாக இங்கிலாந்து நாட்டு விசா பெற்றால் மட்டுமே அந்த நாட்டிற்குள் செல்ல அனுமதிக்கப்படுகின்றார்கள்.
இந்த விசாவை பெற இந்தியாவின் முக்கிய நகரங்களில் குடியேற்ற அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. அதாவது அகமதாபாத், பெங்களூர், சண்டிகர், சென்னை, கொச்சின், கோவா, குர்கா, ஹைதராபாத், ஜெய்ப்பூர், கொல்கத்தா, மும்பை, வடக்கு மும்பை, தெற்கு புதுடெல்லி, பூனே போன்ற நகரங்களில் இங்கிலாந்து நாட்டு விசாவை பெற்றுக் கொள்ளலாம். ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை குறிப்பிட்ட நேரத்திற்குள் பெற்றுக் கொள்ளலாம். தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் மட்டுமே இங்கிலாந்து விசா அலுவலகம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் புதிதாக கோவையில் விசா அலுவலகம் திறக்கப்பட இருக்கின்றது. இது கோவை மட்டுமல்லாமல் தென் மாவட்டங்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருக்கும் என கூறப்படுகின்றது.
கோவையில் வரும் 16ம் தேதி முதல் இந்த விசா அலுவலகம் பயன்பாட்டிற்கு வருகின்றது. புதிய அலுவலகம் பீளமேடு அவினாசி சாலையில் உள்ள Hudco காலணியில் Caledon square – pricol properties கட்டிடத்தில் வர இருக்கிறது. இங்கு திங்கள் முதல் வெள்ளி வரை விசாவிற்காக விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம். காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே அலுவலகம் செயல்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலமாக மேற்கு மண்டலம் மற்றும் தெற்கு மண்டலத்தை சேர்ந்த தமிழக மக்கள் இனிமேல் சென்னை வரை பயணிக்க வேண்டிய அவசியம் இல்லை. கோவையிலிருந்து விசா அலுவலகத்தை தொடர்பு கொண்டு இங்கிலாந்து நாட்டிற்கு செல்வதற்கான விசாவை பெற்றுக் கொள்ளலாம். இதனால் பயணம் மற்றும் நேரமும் மிச்சம் ஆகின்றது. இது தொடர்பான தகவல் என்ற VFS global அதிகார பூர்வ டிவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.