Categories
மாநில செய்திகள்

இனிமேல் தனியார் பள்ளிகளில் இதை தீவிரப்படுத்த வேண்டும்…. பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அதிரடி நடவடிக்கை….!!

கோவை மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வரும் 12 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் ஆசிரியரின் பாலியல் தொல்லையால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து சம்பந்தப்பட்ட ஆசிரியை கைது செய்து அவர் மீது பொக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் அந்த மாணவி புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அவரை கைது செய்யும் வரை மாணவியின் உடலை வாங்க மாட்டோம் என்று அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து தனிப்படை போலீசார் அவரை வலைவீசி தேடி பெங்களூருவில் தலைமறைவாக இருந்த பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனை கைது செய்தனர். அதன் பிறகு மாணவியின் உடலை உறவினர்கள் பெற்றுக் கொண்டனர். இந்த சம்பவத்தில் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதியளித்தனர். அதனைத் தொடர்ந்து உயிரிழந்த மாணவியின் குடும்பத்தாரை நேற்று நேரில் சென்று அன்பில் மகேஷ் ஆறுதல் கூறினார்.

அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒரு தாய் தனது மகளை இழந்து தவித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு பெண் குழந்தையின் தந்தையாக இருந்து வலியை என்னால் உணர முடிகிறது. அதை தொடர்ந்து 24 மணி நேரத்தில் குற்றம் சாட்டப்பட்ட நபரை கைது செய்து போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த குற்றவாளிகளுக்கு எதிரான நடவடிக்கையை தாமதப்படுத்தாமல் விரைவில் எடுக்கப்படும். இதுபோன்ற சம்பவங்கள் பெண் மாணவிகளின் கல்வியே பாதிக்க தமிழக அரசு விடாது என்றும் பெண் குழந்தைகள் நல்லா படித்து நல்ல நிலைக்கு வரவேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து இன்று திருப்பூர் மாவட்டம் உடுமலையில் தரம் உயர்த்தப்பட்ட மாதிரி நூலகத்தை அமைச்சராக அன்பில் மகேஷ் திறந்துவைத்தார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய போது, பள்ளிகளில் குழந்தைகள் மீதான பாலியல் தொல்லைகளை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்குமா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், அரசு பள்ளிகளில் போக்சா சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதுபோலவே தனியார் பள்ளிகளிலும் விழிப்புணர்வு தீவிரப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Categories

Tech |