இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. கூகுள் பே, போன்பே மற்றும் பேடி எம் போன்ற செயலிகளை மக்கள் அதிகளவு பயன்படுத்த தொடங்கிவிட்டனர். ஒருவருக்கொருவர் பணம் அனுப்புவதற்கும்,கடைக்குச் சென்று சிறிய ரக பொருட்களை வாங்குவதற்கும் இந்த செயலிகள் பெரிதும் உதவியாக இருக்கின்றன. ரீசார்ஜ் செய்வதற்கு கூட இந்த செயலிகள் பெரிதும் பயன்படுகிறது. இந்தியாவில் அனைத்து தரப்பு மக்களும் எளிதாக பயன்படுத்தும் வகையில் கூகுள் பே செயலி புதிய அப்டேட்டை கொண்டு வந்துள்ளது.
இந்தியாவில் இதுவரை ஆங்கிலம் மற்றும் இந்தியில் கூகுள் பே செயலி இயங்கியது. ஆனால் புதிய அப்டேட் படி, தமிழ், ஆங்கிலம், வங்காளம், மராத்தி, கன்னடம், தெலுங்கு, குஜராத்தி மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் கூகுள் பே செயலியை இனி பயன்படுத்தலாம். செயலின் வலது பக்கம் மேலே உள்ள ஆப்ஷனை கிளிக் செய்து தமிழ் மொழியை நீங்கள் தேர்வு செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.