Categories
உலக செய்திகள்

“இனிமேல் தான் ஆபத்து”.. கடந்த வருடத்தை போல் பாதிப்பு அதிகரிக்கும்.. ஜெர்மன் சுகாதார நிறுவனம் எச்சரிக்கை..!!

ஜெர்மனியின் சுகாதாரத்துறை நிறுவனம் உருமாற்றம் அடைந்த கொரோனா தற்போது மிக தீவிரமாக பரவுவதாக எச்சரித்துள்ளது. 

ஜெர்மனியின் Robert Koch என்ற நிறுவனத்தின் துணைத் தலைவர் Lars Shaade, மிகவும் தீவிரமாக பரவகூடிய உருமாற்றம் அடைந்த கொரோனோ, தற்போது மேலும் தீவிரமாக பரவுவதாக தெரிவித்துள்ளார். இப்படியே நீடித்தால் கடந்த கிறிஸ்துமஸ் பண்டிகை சமயத்தில் எவ்வாறு கொரோனா தீவிரம் இருந்ததோ, அதேபோன்று வரக்கூடிய ஈஸ்டர் பண்டிகை சமயத்திலும் அதிகமான பாதிப்புகளும் உயிரிழப்புகளும் ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் ஜெர்மனியில் கடந்த ஒரே நாளில் 17, 482 நபர்கள் கொரோனாவால் புதிதாக பாதிப்படைந்துள்ளார்கள். மேலும் 226 நபர்கள் உயிரிழந்திருக்கிறார்கள். ஜெர்மனில் பல விதிமுறைகள் நடைமுறையில் இருந்தாலும் கடந்த 7 நாட்களில் சராசரியாக ஒரு லட்சம் நபர்களுக்கு 96 பேர் பாதிப்படைந்திருப்பதாக தெரியவந்துள்ளது.

Categories

Tech |