நீங்கள் தூங்கும் போது ஒரு சில மாற்றங்களை கொண்டு வந்தால் தூக்கம் நன்றாக வரும். காலையில் எழுந்திருக்கும் போது மிகவும் புத்துணர்வுடன் எழுவீர்கள்.
நாம் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்து உணவு சாப்பிட்டு தூங்கும் போது கிடைக்கும் சுகம் வேறு எங்கும் கிடைக்காது. 7 முதல் 8 மணி நேரம் தூங்கி எழும்போது ஒரு புத்துணர்வு கிடைக்கும். ஆனால் நாம் சரியான முறையில் தூங்குகிறோமா? என்று கேட்டால் அதற்கு பதில் தெரியாது. நாம் தூங்கும் போது சில முறைகளை பின்பற்ற வேண்டும். அப்படி பின்பற்றினால் தசைப்பிடிப்பு, கால்வலி, முதுகுவலி போன்றவற்றில் இருந்து நிவாரணம் பெறலாம்.
அப்படி நீங்கள் ஒரு தலையணையை எடுத்து முழங்காலில் இருந்து கணுக்கால்வரை இரு கால்களுக்கு இடையில் சமமாக வைத்து தூங்கினால் நல்ல தூக்கம் வரும். அதுமட்டுமில்லாமல் உங்களுக்கும் ரத்த ஓட்டம் சீராக செயல்படுவதோடு, நோய் எதிப்பு சக்தியை அதிகரிக்கும். கால்களுக்கிடையில் தலையணை வைத்து தூங்குவது இடுப்பில் உள்ள அழுத்தம் குறைவதோடு முதுகெலும்புகள் நகர்வதை தடுத்து முதுகு வலியை சரி செய்யும். இப்படி ஒருமுறை நீங்கள் முயற்சி செய்து பாருங்கள்.