பிரான்ஸ் அரசு வயதான குடிமக்களும் தற்போது அஸ்ட்ராஜெனகா தடுப்பூசி செலுத்தலாம் என்று அறிவித்துள்ளது.
பிரான்ஸ் அரசு கடந்த மாதத்தில் 65 வயதுக்கு உட்பட்ட நபர்களுக்கு மட்டும் தான் அஸ்ட்ராஜெனகா நிறுவனத்தின் தடுப்பூசியை செலுத்த அனுமதி அளித்திருந்தது. இதற்கு தரவு இல்லை என்று காரணம் கூறப்பட்டது. ஆனால் தற்போது பிரான்ஸ் சுகாதார அமைச்சர் ஆலிவர் வேரன் தொலைக்காட்சியில் பேசியுள்ளார்.
அதில் அவர் கூறியுள்ளதாவது இதற்கு முன்பு பிற நோய்களால் பாதிப்படைந்தவர்கள் உள்பட 65 முதல் 74 வயதிற்கு உட்பட்ட நபர்கள் அனைவரும் அஸ்ட்ராஜெனகா நிறுவனத்தின் தடுப்பூசியை செலுத்திக்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார். மேலும் தடுப்பூசி மையத்தில் பைசர் அல்லது மாடெர்னா நிறுவனத்தின் தடுப்பூசிகள் 75 வயதிற்கு மேல் உள்ள நபர்களுக்கு செலுத்தப்படும் என்றும் கூறியுள்ளார்.
இந்நிலையில் சுகாதார அமைச்சகத்தின் புள்ளிவிபரங்களின் அடிப்படையில் பிப்ரவரி மாதத்தின் இறுதியில் 1.7 மில்லியன் அஸ்ட்ராஜெனகா தடுப்பூசி டோஸ்கள் பெறப்பட்டன. இதில் தற்போது இரண்டு லட்சத்து 73 ஆயிரம் டோஸ்கள் மட்டுமே வினியோகபடுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.