தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக நீட்டிக்கப்பட்ட மின் கட்டணம் மற்றும் இதர நிலுவைத் தொகையை செலுத்துவதற்கு இன்றே கடைசி தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக மின் கட்டணம் செலுத்த கடைசி நாள் மே-10 முதல் ஜூன்-14 வரை இருக்கும் பட்சத்தில் அத்தொகையை செலுத்த ஜூன் 15 கடைசி (இன்று) நாள் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் கொரோனா பாதிப்பு குறைந்ததால் மின் கட்டணம் செலுத்த இனிமேல் கால அவகாசம் நீட்டிக்கப்பட மாட்டாது என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார் .இந்த அறிவிப்பால் குழப்பம் எழுந்துள்ளது. ஏதோ ஒரு காரணத்தால் இன்று மின் கட்டணம் செலுத்த தவறினால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப் படுமா? அல்லது மின் இணைப்பு துண்டிக்கப்படுமா? என்பது குறித்து தெளிவான விளக்கம் தரவில்லை.