Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

இனிமேல் நீ கபடி விளையாட கூடாது…. இருதரப்பினரின் மோதல்…. போலீஸ் விசாரணை…!!

இரு தரப்பினர் மோதி கொண்டதில் 3 பேரை கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டத்திலுள்ள தொட்டியம் பகுதியில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் ரமேஷ் தனது தம்பியான தினேஷ் என்பவருடன் அமர்ந்து பேசி கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் சிலர் இனிமேல் நீ கபடி விளையாட கூடாது என தகாத வார்த்தைகளால் ரமேஷை திட்டியுள்ளனர். மேலும் அவர்கள் ரமேஷின் முதுகில் கத்தியால் குத்தியுள்ளனர்.

இதனை தடுக்க முயன்ற தினேஷையும் அவர்கள் கத்தியால் குத்தியுள்ளனர். அதன் பின் இரு தரப்பினர் மோதிக்கொண்டதில் பிரவீன் என்பவருக்கும் கத்திக்குத்து விழுந்துள்ளது. இது குறித்து இரு தரப்பினரும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |