சென்னை உயர்நீதிமன்றத்தில் வரும் 8-ம் தேதி முதல், நேரடி விசாரணை தொடங்க உள்ளது.
கொரோனா பரவல் காரணமாக நீதிமன்றங்களில் வழக்கு விசாரணை காணொலி மூலமான நடைபெற்று வருகின்றன. அரசு அலுவலகங்கள் மற்றும் பொது நிறுவனங்கள் முழுமையாக திறக்கப்பட்டுள்ளதால், சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில், கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களை பின்பற்றி வரும் 8-ம் தேதி முதல் வழக்கு விசாரணையை நேரடியாக மேற்கொள்வது என நிர்வாக குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தலைமைப் பதிவாளர் திரு.குமரப்பன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
வழக்கறிஞர்கள் விரும்பினால் காணொலி காட்சி மூலமாகவும் ஆஜராகலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இறுதி விசாரணையிலுள்ள வழக்குகளுக்கு மட்டுமே நேரடி விசாரணை நடைபெறுமெனவும், வழக்குகள் காணொலி மூலமாக மட்டுமே நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு மணி நேரத்திற்கு 5 வழக்குகளை மட்டும் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், ஒரு வழக்கிற்கு இரு வழக்கறிஞர் வீதம், அறையின் பரப்பளவை பொறுத்து 6 முதல் 10 வழக்கறிஞர்கள் மட்டுமே விசாரணை அறைக்குள் அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.