Categories
உலக செய்திகள்

இனிமேல் பகிரலாம்… ஒரு வழியாக முடிவுக்கு வந்த ஃபேஸ்புக்… ஆஸ்திரேலிய நிறுவனம் ஒப்புதல்…!!

ஆஸ்திரேலிய அரசு தன் புதிய ஊடக விதிமுறைகளை திருத்தியமைத்ததால் முகநூல் நிறுவனம் ஆஸ்திரேலியா செய்திகள் மீதுள்ள தடையை ரத்து செய்தது.

முகநூல் நிறுவனம் ஆஸ்திரேலியாவின் உள்ளூர் செய்தி நிறுவனங்களுக்கு பணம் செலுத்த ஒப்புதல் அளித்துள்ளது. அதாவது ஆஸ்திரேலிய அரசானது இணையதளங்களில் பகிரும் செய்திகளுக்கு ஃபேஸ்புக் மற்றும் கூகுள் போன்ற நிறுவனங்கள் ஆஸ்திரேலியாவின் செய்தி நிறுவனங்களுக்கு பணம் அளிக்க வேண்டும் என்ற புதிய விதியை நடைமுறைப்படுத்தியுள்ளது.

இதனையடுத்து இதற்கு எதிர்ப்பு தெரிவித்த முகநூல் நிறுவனம் தாங்கள் பகிரும் அனைத்து செய்திகளையும் ஆஸ்திரேலிய மக்கள் படிக்க மற்றும் பகிர முடியாத வகையில் தடை செய்துள்ளது.மேலும் மற்ற நாடுகளும் ஆஸ்திரேலியாவின் ஊடகங்களால் பகிரப்படும் செய்திகளை பார்க்க முடியாத வகையில் தடை செய்தது. எனவே ஆஸ்திரேலிய அரசு மற்றும் முகநூல் நிறுவனம் இரண்டிற்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில் இரண்டு தரப்பினரும் சுமூகமான முடிவுக்கு வந்துள்ளனர். இதன்படி பொது நலன் தொடர்பாக வெளியிடப்படும் ஊடகத்தின் செய்திகள் அனைத்தும் முகநூல் தளத்தில் இனி வெளியாகும் என்று அந்நிறுவனத்தினுடைய ஆஸ்திரேலிய பிரிவு தெரிவித்திருக்கிறது. இதனைத்தொடர்ந்து கூகுள் மற்றும் முகநூல் நிறுவனங்களும் தங்கள் தளங்களில் வெளியாகும் செய்திகளுக்கு உள்ளூர் ஊடக நிறுவனங்களுக்கு பணம் அளிக்க ஒப்புதல் தெரிவித்தது.

Categories

Tech |