கொரோனா நோய்த்தொற்று குறைந்து உள்ள காரணத்தால் மாஸ்க் அணிவது அவசியமில்லை என்று சீன அரசு தெரிவித்துள்ளது.
உலக நாடுகளை அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ் சீனா நாட்டின் வுஹான் நகரில் பரவத்தொடங்கி உலகின் பல்வேறு நாடுகளையும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இதனால் உஷாரான சீன அரசு ஊரடங்கு முறையை அமல் படுத்தியும் பல கட்டுப்பாடுகளை கொண்டு வந்தும் செயல்பட்டது. மேலும் சீன மக்கள் தங்களை வீடுகளில் தனிமையில் படுத்துக்கொண்டோம் விழிப்புணர்வோடும் இருந்தமையால் கொரோனா நோய்த்தொற்று கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக சீன அரசு தெரிவித்துள்ளது.
நோய்த்தொற்று கட்டுப்பாட்டில் உள்ளதால் மாஸ்க் அணிவது மற்றும் கட்டாயமாக்கப்பட்ட விதிமுறைகள் அனைத்தும் தளர்த்தப்பட்டுள்ளன. இதே போல கடந்த 17ஆம் தேதி மாஸ்க் அணிவது கட்டாயமில்லை என்று சீன அறிவிப்பை வெளியிட்டது. அதை தொடர்ந்து மீண்டும் தொற்று அதிகரித்ததால் அந்த உத்தரவை திரும்பப் பெற்றது குறிப்பிடத்தக்கது.