Categories
உலக செய்திகள்

“இனிமேல் ரஷ்யாவை சார்ந்து இருக்க வேண்டாம்”…. அமெரிக்க அதிபரின் முடிவால்…. மகிழ்ச்சியில் ஐரோப்பிய நாடுகள்….!!

ஐரோப்பிய நாடுகளுக்கு இயற்கை எரிவாயுவை கூடுதலாக வழங்க  அமெரிக்க அதிபர் ஒப்புதல் அளித்துள்ளார்.

ஐரோப்பிய யூனியன் நாடுகள் இது வரை இயற்கை எரிவாயுவை ரஷ்யாவிடமிருந்து வாங்கி வந்துள்ளது. இந்த நிலையில் போரால் ஏற்பட்ட தட்டுப்பாட்டை சரிசெய்ய அந்நாடுகளுக்கு கூடுதல் இயற்கை எரிவாயு வழங்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஒப்புதல் அளித்தார். மேலும் இது குறித்து அவர் கூறியதாவது “ஐரோப்பிய யூனியன் நாடுகள் குளிர்காலத்தில் தங்கள் வீடுகளை சூடேற்றவும்,  சமையல் செய்யவும், மின்சார தயாரிப்பு உள்ளிட்ட காரணத்திற்கு பயன்படுத்துவதற்காக  40  சதவிகிதம் இயற்கை எரிவாயுவை ரஷ்யாவிடமிருந்து தங்கள் நாட்டிற்கு இறக்குமதி செய்து கொண்டிருந்தன.

இதனைத் தொடர்ந்து ஐரோப்பிய நாடுகள் எரிவாயு போன்ற தேவைகளுக்கு ரஷ்யாவை சார்ந்து இருப்பதை தவிர்க்க இந்த வருடம் கூடுதலாக 1500 கோடி கன மீட்டர் இயற்கை வாயுவை அந்த நாட்டிற்கு வழங்கப்படும்.  மேலும்  2030 ஆம் ஆண்டு இந்த இயற்கை எரிவாயுவின் அளவை விட பல்லாயிரம் கோடி கன மீட்டராக அதிகரிக்க  நடவடிக்கை எடுக்கப்படும்” என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்

Categories

Tech |