Categories
உலக செய்திகள்

“இனிமே அந்தப் பக்கம் தலவச்சுராதீங்க”… சரணடைந்த பயங்கரவாதிகள்…. எச்சரித்த தலைவர்கள்…!!

ஆப்கானிஸ்தானில் பழங்குடி தலைவர்களின் முயற்சியால் 50 ஐ.எஸ் பயங்கரவாதிகள் சரணடைந்தார்கள்.

ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான் பயங்கரவாதிகள் தங்கள் வசம் கொண்டு வந்துள்ளார்கள். மேலும் அங்கு பல கட்டுப்பாடுகள் விதித்த தலிபான்கள் அந்நாட்டு தங்களது ஆதிக்கத்தையும் செலுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் பழங்குடி தலைவர்களின் தீவிர முயற்சியால் அந்நாட்டிலுள்ள நங்கார்ஹர் மாநிலத்தில் 50 ஐ.எஸ் பயங்கரவாதிகள் சரணடைந்துள்ளார்கள்.

அவ்வாறு சரணடைந்த 50 பேரில் எவராவது மீண்டும் பயங்கரவாத இயக்கத்தை நோக்கி சென்றால் மிகக்கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் பழங்குடி தலைவர்கள் அவர்களை எச்சரித்துள்ளார்கள்.

Categories

Tech |