Categories
தேசிய செய்திகள்

இனிமே இதெல்லாம் நாங்க தர மாட்டோம்… காசு போட்டுருவோம் நீங்களே வாங்கிக்கோங்க… மாநில அரசின் புதிய அறிவிப்பு…!!!!

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் மாணவர்களுக்கு வழங்கப்படும் சீருடை, புத்தகம், ஆகியவற்றிற்கு பதிலாக பெற்றோரின் வங்கி கணக்கில் பணம் செலுத்த உள்ளதாக முடிவு செய்துள்ளது.

உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஒவ்வொரு ஆண்டும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு பள்ளி சீருடை, புத்தகங்கள், பை, காலணிகள் ஆகியவற்றை வழங்குவது வழக்கம்.  இந்தத் திட்டத்தை மேம்படுத்தும் வகையில் இலவசமாக வழங்கப்படும் பொருள்களுக்கு பதிலாக பெற்றோர்களின் வங்கி கணக்கில் பணம் செலுத்த உத்திரபிரதேச அரசு முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையில் சட்டமன்ற கூட்டம் நடைபெற்றது. அதில் இது தொடர்பாக பல முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன்படி இனி மாணவர்களுக்கு வழங்கப்படும் சீருடை, புத்தக பை, காலணி, காலுறை, ஸ்வெட்டர் உள்ளிட்ட பொருட்களுக்கு பதிலாக அந்தந்த மாணவர்களின் பெற்றோர்களின் வங்கி கணக்கில் பணமாக  செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூபாய் 1800 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 1.6 கோடி மாணவர்கள் பயன்பெறுவார்கள் என்று தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |